பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை ஜியோ சினிமா செயலியில் இலவசமாக பார்க்கலாம்
|ஆங்கிலம், இந்தி ,தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அனைத்து போட்டிகளையும் இலவசமாக பார்க்கலாம்.
புதுடெல்லி,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26-ந்தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு இந்தியா சார்பில் இதுவரை 124 பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடருக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ளதால் இதன் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரித்துள்ளது.பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் ஸ்போர்ட்ஸ் 18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான டிஜிட்டல் தள ஸ்ட்ரீமிங் பார்ட்னராக ஜியோசினிமா உள்ளது.
இந்த நிலையில, இந்தியாவில் ஜியோ சினிமா செயலியில் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது . ஆங்கிலம், இந்தி , தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 4k தொழில்நுட்பத்தில் அனைத்து போட்டிகளையும் இலவசமாக பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ சினிமா கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் போட்டிகளை இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்தது . இந்த சீசனில் 62 கோடி பார்வைகளைப் பெற்று ஜியோ சினிமா சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.