< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா
ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதிக்கு முன்னேறியது இந்தியா

தினத்தந்தி
|
29 July 2024 7:30 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான பாரீஸ் ஒலிம்பிக்கில் 206 நாடுகளை சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக்குக்கு சென்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்றன.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இன்று நடைபெற்ற பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் - சிராஜ் ஷெட்டி ஜோடி காலிறுதிக்கு முன்னேறி அசத்தி உள்ளது.

ஒலிம்பிக் தொடரில் பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய ஜோடி என்ற பெருமையையும் சாய்ராஜ் - சிராஜ் ஷெட்டி பெற்றுள்ளனர்.

குரூப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு கடைசி 8 இடங்களுக்குள் தங்களது இருப்பை உறுதிசெய்திருந்த இந்திய ஜோடி, ரியான்-பஜர் மற்றும் கோர்வி-லாபார் ஜோடிகள் மோதிய ஆட்டத்தில் கோர்வி-லாபார் தோல்வியடைந்த பிறகு காலிறுதிக்கான தங்களுடைய இடத்தை சாத்விக்-சிராக் ஜோடி உறுதிப்படுத்தி உள்ளது.

தங்களுடைய கடைசி குரூப் போட்டியில் இந்தோனேசியாவின் ரியான் மற்றும் பஜர் ஜோடியை இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி எதிர்கொள்ள உள்ளது.

மேலும் செய்திகள்