< Back
ஒலிம்பிக் 2024
வெண்கலம் வென்ற அமன் ஷெராவத் - தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
ஒலிம்பிக் 2024

வெண்கலம் வென்ற அமன் ஷெராவத் - தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

தினத்தந்தி
|
10 Aug 2024 7:13 PM IST

வெண்கலப்பதக்கம் வென்ற அமன் ஷெராவத்தை பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் அழைத்து பேசினார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான மல்யுத்தம் (ஆண்கள் 57 கிலோ எடைபிரிவு பிரீஸ்டைல்) வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத், பியூர்டோரிகோவின் டேரியன் கிரஸ் உடன் மோதினார்.இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமன் ஷெராவத் 13-5 என்ற புள்ளிக்கணக்கில் டேரியன் கிரஸை வீழ்த்தி வெண்கலப்பத்தக்கத்தை கைப்பற்றினார்.

இந்த நிலையில், வெண்கலப்பத்தக்கம் வென்ற அமன் ஷெராவத்தை பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் அழைத்து பேசினார். மேலும் சிறப்பாக விளையாடி வெண்கலம் வென்ற அமன் ஷெராவத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் செய்திகள்