பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் இன்றைய போட்டிகள்
|இன்று நடைபெற உள்ள ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா களமிறங்க உள்ளார்.
பாரீஸ்,
பாரீஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் அபாரமான திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். தற்போது வரை போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.
அதன்படி, 21 தங்க பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 20 தங்கம் உட்பட 78 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும், 13 தங்கம் உட்பட 48 பதக்கங்களுடன் பிரான்ஸ் 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களுடன் 60-வது இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெற உள்ள ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா களமிறங்க உள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உண்டாக்கி உள்ளது.
இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ள இன்றைய போட்டிகள்:-
டேபிள் டென்னிஸ்:- இந்தியா-சீனா (ஆண்கள் அணிகள் பிரிவு தொடக்க சுற்று), பகல் 1 30 மணி.
தடகளம்: ஈட்டி எறிதல் தகுதி சுற்றில் கிஷோர் குமார் ஜெனா (பகல் 1.50 மணி), நீரஜ் சோப்ரா (மாலை 3.20 மணி), கிரண் பாஹல் (பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டம் ரிபிசாஜ் சுற்று), பிற்பகல் 2.50 மணி.
மல்யுத்தம்:- வினேஷ் போகத்( இந்தியா)-சுசாகி யூ (ஜப்பான்), (பெண்களுக்கான 50 கிலோ பிரீஸ்டைல் கால்இறுதிக்கு முந்தைய சுற்று), பிற்பகல் 2 30 மணி.
ஆக்கி:- இந்தியா-ஜெர்மனி (ஆண்கள் அரைஇறுதி ஆட்டம்), இரவு 10 30 மணி.