< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார் ஜோகோவிச்
ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: தங்கப்பதக்கத்தை தட்டி சென்றார் ஜோகோவிச்

தினத்தந்தி
|
4 Aug 2024 8:57 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அல்காரசை வீழ்த்தி ஜோகோவிச் தங்கப்பதக்கம் தட்டி சென்றார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னாள் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் (செர்பியா), 3-ம் நிலை வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் இரு வீரர்களும் சரி சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் டை பிரேக்கர் வரை போராடி வெற்றி பெற்றார். இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தினார்.

இறுதிப்போட்டியில் தோல்வியடைந்த அல்காரஸ் வெண்கல பதக்கம் வென்றார்.

மேலும் செய்திகள்