< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ரபேல் நடாலை வீழ்த்திய ஜோகோவிச்

image courtesy: AFP

ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ரபேல் நடாலை வீழ்த்திய ஜோகோவிச்

தினத்தந்தி
|
30 July 2024 9:25 AM IST

ரபேல் நடாலை வீழ்த்தி ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் 'நம்பர் ஒன்' வீரர்களான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), ரபெல் நடாலும் (ஸ்பெயின்) மோதினர். களிமண் தரையில் நடக்கும் இந்த போட்டியில் டென்னிசின் ஜாம்பவான்கள் மோதியதால் யாருடைய கை ஓங்கும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் நடாலை வெளியேற்றி 3-வது சுற்றை எட்டினார்.

மேலும் செய்திகள்