< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
2 Aug 2024 8:45 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு ஜோகோவிச் முன்னேறியுள்ளார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

7-வது நாளான நேற்று நடைபெற்ற டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச், கிரீஸ் நாட்டை சேர்ந்த ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் உடன் இன்றிரவு பலப்பரீட்சை நடத்தினார்.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3 மற்றும் 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இவர் அரையிறுதியில் இத்தாலி வீரரான லொரன்சோ முசெட்டி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

மேலும் செய்திகள்