< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக்; முதல் சுற்றில் வெற்றி பெற்ற லக்ஷயா சென்

Image Courtesy: AFP 

ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக்; முதல் சுற்றில் வெற்றி பெற்ற லக்ஷயா சென்

தினத்தந்தி
|
28 July 2024 1:18 AM IST

இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானுடன் மோதினார்.

பாரீஸ்,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்' போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற பேட்மிண்டன் விளையாட்டில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் லக்ஷயா சென், கவுதமாலாவின் கெவின் கோர்டானுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஷயா சென் 21-8, 22-20 என்ற புள்ளிக் கணக்கில் கெவின் கோர்டானுடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

மேலும் செய்திகள்