< Back
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக்: இந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா காலிறுதிக்கு முன்னேற்றம்
|10 Aug 2024 3:55 PM IST
ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தி ரித்திகா காலிறுதிக்கு முன்னேறினார்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த தொடரில் இந்தியா இதுவரை 6 பதக்கங்கள் (1 வெள்ளி, 5 வெண்கலம்) வென்றுள்ளது. இந்நிலையில் மகளிர் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை ரித்திகா காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
76 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை ரித்திகா - ஹங்கேரி வீராங்கனை பெர்னாடட் நாகி ஆகியோர் மோதினர். இதில் ரித்திகா 12-2 என்ற புள்ளிக்கணக்கில் ஹங்கேரி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.