< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய இணை காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய இணை காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
2 Aug 2024 2:37 PM IST

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 8-வது நாளான இன்று நடைபெற்ற வில்வித்தை கலப்பு அணிகள் தொடக்க சுற்று போட்டியில் இந்திய இணையான தீரஜ் பொம்மதேவரா- அங்கிதா பகத் ஜோடி, இந்தோனேசியாவின் ஆரிப் பங்கஸ்டு - தியானந்தா கோருனிசா இணையுடன் மோதியது.

இந்த போட்டியில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி 5-1 என்ற கணக்கில் இந்தோனேசிய இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

இந்திய இணை காலிறுதியில் ஸ்பெயின் ஜோடியுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது.

மேலும் செய்திகள்