< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக்; வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்
ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக்; வில்வித்தையில் தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
3 Aug 2024 2:44 PM IST

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டியில் 6-4 என்ற புள்ளி கணக்கில் குரோப்பனை வீழ்த்தி தீபிகா குமாரி காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தின சுற்றில் இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி, ஜெர்மனியின் மிச்செலே குரோப்பன் ஆகியோர் விளையாடினர்.

இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்து தீபிகா அதிரடியாக விளையாடி புள்ளிகள் சேர்ப்பில் ஈடுபட்டார். இதில், 6-4 என்ற புள்ளி கணக்கில் குரோப்பனை வீழ்த்தி தீபிகா காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.

இதேபோன்று மற்றொரு போட்டியில், இந்தியாவின் பஜன் கவுர் மற்றும் இந்தோனேசியாவின் தியாநந்தா சோய்ருனிசா ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதில், இந்திய வீராங்கனை வெற்றி பெற்றால், அவரை எதிர்த்து தீபிகா விளையாடுவார்.

மேலும் செய்திகள்