< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக்: வீராங்கனைகளை விமர்சித்த வர்ணனையாளர் அதிரடி நீக்கம்
ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக்: வீராங்கனைகளை விமர்சித்த வர்ணனையாளர் அதிரடி நீக்கம்

தினத்தந்தி
|
30 July 2024 6:38 AM IST

33-வது ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இதில் 4-வது நாளான நேற்று பெண்களுக்கான 4x100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின்போது பிரான்சை சேர்ந்த யூரோஸ்போர்ட் டெலிவிஷன் சேனலுக்காக வர்ணனை பணியில் ஈடுபட்ட மூத்த விளையாட்டு வர்ணனையாளர் பாப் பல்லார்ட் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பெண்களுக்கான 4x100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றபோது, வர்ணனை செய்த பல்லார்ட், 'இந்த பெண்கள் இப்போது தான் முடித்திருக்கிறார்கள். பெண்கள் எந்த மாதிரி விஷயங்களை விரும்புவார்கள் என்பது உங்களுக்கே தெரியும். தங்களுக்கு மேக்கப்போட்டு அழகுப்படுத்தி கொண்டு சுற்றி திரிவார்கள்' என்று அவர் விமர்சித்தது சமூக வலைதளத்தில் வைரலானது.

பெண்களின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அவரது கருத்து இருப்பதாக கண்டனங்கள் எழும்பின. இதையடுத்து அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து விளையாட்டு சேனல் அதிரடியாக நீக்கி இருக்கிறது.

மேலும் செய்திகள்