< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் கூடைப்பந்து: பிரான்சை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்கா

Image Courtesy : AFP

ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக் கூடைப்பந்து: பிரான்சை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்கா

தினத்தந்தி
|
11 Aug 2024 5:18 AM IST

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது.

பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கடைசி நாளான இன்று ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் அமெரிக்க அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அமெரிக்கா 98-87 என்ற புள்ளிக்கணக்கில் பிரான்சை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. தோல்வி கண்ட பிரான்ஸ் அணி வெளிப்பதக்கமும், செர்பியா அணி வெண்கலப்பதக்கமும் வென்றது.

மேலும் செய்திகள்