< Back
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்சயா சென் இன்று ஆடுகிறார்
|5 Aug 2024 5:46 AM IST
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் இன்று மாலை நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் லக்சயா சென் ஆடுகிறார்.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் பேட்மிண்டன் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் லக்சயா சென், டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்சென்னிடம் தோல்வியடைந்தார். இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அரிய வாய்ப்பை லக்சயா சென் இழந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் 7-ம் நிலை வீரரான மலேசியாவின் லீ ஸி ஜியாவுடன், லக்சயா சென் மோதுகிறார். இதற்கு முன்பு ஸி ஜியாவுக்கு எதிராக ஆடிய 5 ஆட்டங்களில் 4-ல் லக்சயா சென் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.