< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

லக்சயா சென் (image courtesy: AFP)

ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: இந்திய வீரர் லக்சயா சென் அரையிறுதிக்கு முன்னேற்றம்

தினத்தந்தி
|
2 Aug 2024 11:15 PM IST

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரருடன் மோதினார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரர் சோ டைன் சென் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் லக்சயா சென் 19-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் சோ டைன்-ஐ வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம், ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றார்.

மேலும் செய்திகள்