< Back
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை: வெண்கல பதக்க போட்டியில் இந்திய ஜோடி தோல்வி
|2 Aug 2024 8:16 PM IST
வில்வித்தை வெண்கல பதக்க போட்டியில் இந்திய ஜோடி தோல்வியடைந்துள்ளது.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் வில்வித்தை கலப்பு அணிகள் அரையிறுதி போட்டியில் தோல்வியடைந்த பொம்மதேவரா- அங்கிதா பகத் (இந்தியா) மற்றும் கேசி காப்ஹோல்ட் - பிராடி எலிசன் (அமெரிக்கா) இணைகள் வெண்கல பதக்கத்திற்கான போட்டியில் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் அமெரிக்க இணை 6-2 என்ற கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.