< Back
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக்: பளுதூக்குதலில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார் இந்தியாவின் மீராபாய் சானு
ஒலிம்பிக் 2024

ஒலிம்பிக்: பளுதூக்குதலில் பதக்க வாய்ப்பை தவறவிட்டார் இந்தியாவின் மீராபாய் சானு

தினத்தந்தி
|
8 Aug 2024 1:27 AM IST

ஒலிம்பிக் பளுதூக்குதலில் இந்தியாவின் மீராபாய் சானு பதக்க வாய்ப்பை தவறவிட்டார். அவர் 4ம் இடம் பிடித்தார்.

பாரீஸ்,

ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 64வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்கில் மகளிர் பளுதூக்குதல் 49 கிலோ எடைபிரிவுக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில், இந்தியாவின் மீராபாய் சானு பங்கேற்றார்.

அவர், ஸ்ட்ரச் பிரிவில் 88 புள்ளி கிளீன் அண்ட் ஜர்க் பிரிவில் 111 புள்ளிகள் என மொத்தம் 199 புள்ளிகள் பிடித்து 4ம் இடம் பிடித்தார். 114 கிலோவை தூக்கும் இறுதி முயற்சியில் மீராபாய் சானு தோல்வியடைந்தார். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 199 புள்ளிகளுடன் 4ம் இடம் பிடித்தார். அதேவேளை, அவரை விட ஒரு புள்ளி (200 புள்ளிகள்) அதிகம்பெற்ற தாய்லாந்து வீராங்கனை வெண்கலப்பதக்கம் வென்றார். ஒருபுள்ளி வித்தியாசத்தில் மீராபாய் சானு பதக்க வாய்ப்பை இழந்தார்.

மேலும் செய்திகள்