பாரீஸ் ஒலிம்பிக் பேட்மிண்டன்: ஆக்சல்செனை வீழ்த்துவாரா லக்சயா சென்..? - அரையிறுதியில் இன்று மோதல்
|லக்சயா சென் இன்று நடைபெறும் அரையிறுதியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்வார்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் பேட்மிண்டனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென், சீன தைபே வீரர் சோ டைன் சென்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன் மூலம், ஒலிம்பிக்கில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை லக்சயா சென் பெற்றார். இந்த நிலையில் இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியில் லக்சயா சென், 2-ம் நிலை வீரரான டென்மார்க்கின் விக்டர் ஆக்சல்செனுடன் மோதுகிறார்.
இந்த போட்டியில் லக்சயா சென் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்வார். மாறாக தோற்றால் அடுத்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் விளையாடுவார்.