< Back
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய அணி வெற்றி
|27 July 2024 9:56 PM IST
பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.
பாரீஸ்,
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'ஒலிம்பிக்'போட்டி பாரீஸ் நகரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
இந்நிலையில் ஒலிம்பிக் தொடரில் இன்று நடந்த பேட்மிண்டனுக்கான ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் - சிராக் ஷெட்டி ஜோடி, பிரான்ஸ் நாட்டின் கார்வி - லாபர் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பிரான்ஸ் அணியை 21-17 மற்றும் 21-14 என்ற செட் கணக்கில் இந்திய அணி வீழ்த்தியது.
முன்னதாக பாரிஸ் ஒலிம்பிக் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் லக்சயா சென் அபார வெற்றியை பெற்றார். டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் அரையிறுதி சுற்றில் விளையாடிய கெவின் கார்டனை 21-8 மற்றும் 22-20 என்ற செட் கணக்கில் லக்சயா சென் வீழ்த்தி அசத்தினார்.