< Back
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக் வில்வித்தை: காலிறுதியில் தீபிகா குமாரி தோல்வி

தினத்தந்தி
|
3 Aug 2024 5:48 PM IST

தீபிகா குமாரி காலிறுதியில் தென் கொரிய வீராங்கனையான நாம் சுஹியோன் உடன் மோதினார்.

பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி, தென் கொரியாவின் நாம் சுஹியோன் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.

இந்த போட்டியில், தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிய தென் கொரிய வீராங்கனை 6-4 என்ற புள்ளி கணக்கில் தீபிகா குமாரியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இதன் மூலம் தீபிகா குமாரி காலிறுதி சுற்றில் தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார்.

மேலும் செய்திகள்