< Back
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் 2024
ஒலிம்பிக் வில்வித்தை: இந்திய ஆடவர் அணி காலிறுதியில் தோல்வி
|29 July 2024 8:00 PM IST
இன்று நடைபெற்ற வில்வித்தை காலிறுதி போட்டியில் இந்திய ஆடவர் அணி, துருக்கி அணியுடன் மோதியது.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் விளையாட்டு திருவிழா பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்திய தரப்பில் 117 பேர் பாரீஸ் ஒலிம்பிக் தொடருக்கு சென்றுள்ளனர்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் 4-வது நாளான இன்று நடைபெற்ற வில்வித்தை காலிறுதி போட்டியில் இந்திய ஆடவர் அணி, துருக்கி அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 2-6 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய ஆடவர் அணி அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்தது.