இந்திய மல்யுத்த வீராங்கனை ரித்திகா காலிறுதி போட்டியில் தோல்வி
|காலிறுதி சுற்றில் ரித்திகா ஹூடா - ஐபெரி மெடட் ஆகியோர் மோதினர்.
பாரீஸ்,
33-வது ஒலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தம் போட்டியின் காலிறுதி சுற்றில் (76 கிலோ எடை பிரிவு) இந்திய வீராங்கனை ரித்திகா ஹூடா - கிர்கிஸ்தான் வீராங்கனை ஐபெரி மெடட் ஆகியோர் மோதினர்.இந்த போட்டியில் இரு வீராங்கனைகளும் தலா ஒரு புள்ளிகள் எடுத்தனர். இதனால் 1-1 என போட்டி டிராவில் முடிந்தது. போட்டி டிராவில் முடிந்ததால் கவுண்ட்பேக் விதிப்படி கடைசி புள்ளியை பெற்று போட்டியை டிரா செய்த வீராங்கனை வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். அதன்படி கடைசி புள்ளியை பெற்று போட்டியை டிரா செய்த ஐபெரி மெடட் வெற்றி பெற்றார். இதனால் ரித்திகா காலிறுதி போட்டியில் தோல்வியடைந்தார்.
இந்த காலிறுதி போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும் , கிர்கிஸ்தான் வீராங்கனை ஐபெரி மெடட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றால் 'ரெபிசேஜ்' முறைப்படி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் விளையாட ரித்திகாவுக்கு வாய்ப்புள்ளது.