< Back
ஒலிம்பிக் 2024
பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றி
ஒலிம்பிக் 2024

பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றி

தினத்தந்தி
|
31 July 2024 5:48 PM IST

ஒலிம்பிக் போட்டியின் வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் இந்தியா இதுவரை 2 பதக்கங்கள் (2 வெண்கலம்) வென்று அசத்தியுள்ளது. இந்த சூழலில் 6-வது நாளான இன்று இந்திய வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மகளிர் வில்வித்தையில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெற்றிபெற்றார். தன்னை எதிர்ப்போட்டியிட்ட நெதர்லாந்து வீராங்கனை ரொபீன்னை 6-2 என்ற கணக்கில் வீழ்த்தி தீபிகா குமாரி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அடுத்த சுற்றில் தீபிகா குமாரி, ஜெர்மன் வீராங்கனையை சந்திக்கிறார்

மேலும் செய்திகள்