< Back
ஒலிம்பிக் 2024
ஆண் நண்பருடன் வெளியே சென்ற வீராங்கனை; ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற்றம்
ஒலிம்பிக் 2024

ஆண் நண்பருடன் வெளியே சென்ற வீராங்கனை; ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியேற்றம்

தினத்தந்தி
|
31 July 2024 8:17 PM IST

பிரேசில் நீச்சல் வீராங்கனை அன்னா கரோலினா ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

பாரீஸ்,

33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் பாரீசில் உள்ள ஒலிம்பிக் கிராமத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நீச்சல் வீராங்கனை அன்னா கரோலினா, உரிய அனுமதியின்றி தனது ஆண் நண்பரும் சக நீச்சல் வீரருமான கேப்ரியல் சாண்டோஸ் உடன் ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், கரோலினாவை ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்குவதாகவும், உடனடியாக அவர் நாடு திரும்ப வேண்டும் என்றும் பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், கரோலினாவுடன் அவுட்டிங் சென்ற சான்டோஸை இதுபோன்ற செயலில் ஈடுபடக் கூடாது என பிரேசில் ஒலிம்பிக் கமிட்டி எச்சரித்துள்ளது.



மேலும் செய்திகள்