< Back
ஹாக்கி
ஹாக்கி
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா- ஜப்பான் இன்று மோதல்
|14 Dec 2024 5:03 AM IST
முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
மஸ்கட்,
9-வது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் சீனா , இந்தியா, 'பி' பிரிவில் ஜப்பான்,தென் கொரியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இன்று நடைபெறும் முதலாவது அரையிறுதியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு போட்டி நடைபெறும்