< Back
ஹாக்கி
ஹாக்கி
மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி 2-வது வெற்றி
|10 Dec 2024 9:54 AM IST
இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் சீனாவை எதிர் கொள்கிறது.
மஸ்கட்,
10 அணிகள் இடையிலான 9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி தொடர் (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதலாவது ஆட்டத்தில் 13-1 என்ற கோல் கணக்கில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் மலேசியாவுடன் நேற்று மோதியது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளாலும் முதல் பாதியில் கோல் அடிக்க முடியவில்லை.
2-வது பாதியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்தியா அடுத்தடுத்து கோல்களை போட்டு அசத்தியது. முடிவில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் மலேசியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணியில் தீபிகா 3 கோல்களும், வைஷ்ணவி மற்றும் கனிகா சிவாச் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்தியா அடுத்த ஆட்டத்தில் சீனாவை நாளை எதிர்கொள்கிறது.