< Back
ஹாக்கி
ஹாக்கி
மகளிர் ஆசிய ஆக்கி: சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஜெய் ஷா வாழ்த்து
|21 Nov 2024 6:34 PM IST
இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
6 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது. இதில் 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தது.
இந்நிலையில் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
சீனாவை வீழ்த்தி ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்திய மகளிர் ஆக்கி அணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது வரலாற்று வெற்றி. தேசத்திற்கு பெருமை . இந்திய அணி மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் . என தெரிவித்துள்ளார்.