< Back
ஹாக்கி
பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா - ஜப்பான் இன்று மோதல்

image courtesy: @TheHockeyIndia

ஹாக்கி

பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: அரையிறுதியில் இந்தியா - ஜப்பான் இன்று மோதல்

தினத்தந்தி
|
19 Nov 2024 12:12 PM IST

8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது.

ராஜ்கிர்,

8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும், ஜப்பான் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

தென் கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி) 5-வது இடமும், தாய்லாந்து (ஒரு டிரா, 4 தோல்வி) கடைசி இடமும் பெற்று அரையிறுதி வாய்ப்பை இழந்தன. இந்த நிலையில் இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.

அதில் பிற்பகல் 2.15 மணிக்கு நடைபெறும் முதலாவது அரயிறுதியில் சீனா-மலேசியா அணிகள் மோதுகின்றன. அதைத்தொடர்ந்து மாலை 4.45 மணிக்கு நடைபெறும் 2-வது அரையிறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 11-வது இடத்தில் உள்ள ஜப்பானை எதிர்கொள்கிறது.

மேலும் செய்திகள்