< Back
ஹாக்கி
ஹாக்கி
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி: இன்று தொடக்கம்
|11 Nov 2024 2:14 AM IST
இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் மலேசியாவுடன் மோதுகிறது.
ராஜ்கிர்,
8-வது மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் இன்று தொடங்குகிறது. வருகிற 20-ந் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, ஜப்பான், தென் கொரியா சீனா, மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் ஜப்பான்- தென் கொரியா அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் மலேசியா உடன் இன்று மோதுகிறது.
இந்திய அணி தனது எஞ்சிய லீக் ஆட்டங்களில் 12-ந் தேதி தென் கொரியாவையும், 14-ந் தேதி தாய்லாந்தையும், 16-ந் தேதி சீனாவையும், 17-ந் தேதி ஜப்பானையும் சந்திக்கிறது.