< Back
ஹாக்கி
மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

image courtesy: twitter/@TheHockeyIndia

ஹாக்கி

மகளிர் ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா

தினத்தந்தி
|
19 Nov 2024 6:58 PM IST

இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவுடன் மல்லுக்கட்ட உள்ளது.

ராஜ்கிர்,

8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும், ஜப்பான் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

இந்திய அணி இன்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. இரு அணிகளும் சம பலத்துடன் மல்லுக்கட்டியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது. முதல் பாதியில் இரு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை.

இதனையடுத்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இந்திய அணி 48 மற்றும் 56-வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தியது. ஜப்பானால் பதில் கோல் திருப்ப முடியவில்லை. இதன் மூலம் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா தரப்பில் நவ்னீத் கவுர் மற்றும் லால்ரெம்சியாமி தலா 1 கோல் அடித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினர்.

இந்தியா தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவுடன் மல்லுக்கட்ட உள்ளது.

மேலும் செய்திகள்