< Back
ஹாக்கி
ஹாக்கி
சுல்தான் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்
|19 Oct 2024 6:39 AM IST
முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது
ஜோஹர்,
12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஜூனியர் ஆக்கி (21 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி மலேசியாவில் உள்ள ஜோஹரில் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 26-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 3 முறை சாம்பியனான இந்தியா, மலேசியா, ஜப்பான், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் 'டாப்'-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
தொடக்க நாளான இன்று நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது. இந்திய அணி எஞ்சிய லீக் ஆட்டங்களில் நாளை இங்கிலாந்தையும், 22-ந்தேதி மலேசியாவையும், 23-ந்தேதி ஆஸ்திரேலியாவையும், 25-ந்தேதி நியூசிலாந்தையும் சந்திக்கிறது.