< Back
ஹாக்கி
சுல்தான் கோப்பை ஆக்கி: வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணி

Image Courtesy: @TheHockeyIndia

ஹாக்கி

சுல்தான் கோப்பை ஆக்கி: வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணி

தினத்தந்தி
|
27 Oct 2024 6:46 AM IST

இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

ஜோஹர்,

6 அணிகள் இடையிலான 12-வது சுல்தான் ஜோஹர் கோப்பை ஆக்கி (21 வயதுக்கு உட்பட்டோர்) போட்டி மலேசியாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான இந்திய அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதனால் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

இதைத்தொடர்ந்து நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.

மேலும் செய்திகள்