< Back
ஹாக்கி
தேசிய சீனியர் ஆக்கி: அரையிறுதிக்கு முன்னேறுமா தமிழக அணி..? காலிறுதியில் உத்தரபிரதேசத்துடன் மோதல்

கோப்புப்படம்

ஹாக்கி

தேசிய சீனியர் ஆக்கி: அரையிறுதிக்கு முன்னேறுமா தமிழக அணி..? காலிறுதியில் உத்தரபிரதேசத்துடன் மோதல்

தினத்தந்தி
|
13 Nov 2024 2:15 AM IST

தேசிய சீனியர் ஆக்கி தொடரில் லீக் சுற்று முடிவடைந்து விட்டது.

சென்னை,

14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 30 மாநில அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் (ஏ), அரியானா (பி), தமிழ்நாடு (சி), கர்நாடகா (டி), ஒடிசா (இ), உத்தரபிரதேசம் (எப்), மராட்டியம் (ஜி), மணிப்பூர் (எச்) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறின.

இதில் இன்று நடைபெறும் காலிறுதி ஆட்டம் ஒன்றில் தமிழக அணி, உத்தரபிரதேசத்தை எதிர்கொள்கிறது. சொந்த மண்ணில் வெற்றி பெற்று தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற ஆவலில் ரசிகர்கள் உள்ளனர்.

மேலும் செய்திகள்