< Back
ஹாக்கி
ஹாக்கி
தேசிய சீனியர் ஆக்கி: தமிழக அணி காலிறுதிக்கு முன்னேற்றம்
|8 Nov 2024 1:09 AM IST
தமிழக அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் அந்தமான் நிக்கோபார் உடன் மோதியது.
சென்னை,
14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.
இதில் பங்கேற்றுள்ள 30 மாநில அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணி கால்இறுதிக்கு தகுதி பெறும்.
இதில் தமிழக அணி (சி பிரிவு) தனது கடைசி லீக் ஆட்டத்தில் அந்தமான் நிக்கோபார் உடன் மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தமிழக அணி கோல் மழை பொழிந்தது. முழு நேர ஆட்ட முடிவில் தமிழகம் 43-0 என்ற கோல் கணக்கில் அந்தமான் நிக்கோபாரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.