< Back
ஹாக்கி
தேசிய சீனியர் ஆக்கி  - ஒடிசா அணி சாம்பியன்
ஹாக்கி

தேசிய சீனியர் ஆக்கி - ஒடிசா அணி சாம்பியன்

தினத்தந்தி
|
16 Nov 2024 7:08 PM IST

ஒடிசா அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியது

சென்னை,

14-வது ஆக்கி இந்தியா தேசிய சீனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் பங்கேற்ற 30 மாநில அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் பஞ்சாப் (ஏ), அரியானா (பி), தமிழ்நாடு (சி), கர்நாடகா (டி), ஒடிசா (இ), உத்தரபிரதேசம் (எப்), மராட்டியம் (ஜி), மணிப்பூர் (எச்) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்து காலிறுதிக்கு முன்னேறின.

இதில் காலிறுதி ஆட்டங்களில் உத்தரபிரதேசம் , மணிப்பூர் , அரியானா, ஒடிசா அணிகள் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன . அரையிறுதியில் வெற்றி பெற்று ஒடிசா - அரியானா இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த நிலையில் ஒடிசா - அரியானா அணிகள் மோதிய இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் ஒடிசா அணி தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒடிசா சாம்பியன் பட்டம் வென்றது .

மேலும் செய்திகள்