< Back
ஹாக்கி
ஜூனியர் ஆக்கி தொடர்: பெல்ஜியத்திடம் இந்திய அணி தோல்வி

கோப்புப்படம்

ஹாக்கி

ஜூனியர் ஆக்கி தொடர்: பெல்ஜியத்திடம் இந்திய அணி தோல்வி

தினத்தந்தி
|
24 May 2024 9:44 AM IST

பெல்ஜியத்திற்கு எதிராக இந்திய ஆக்கி அணி தோல்வியடைந்தது.

பிரிடா,

இந்திய ஜூனியர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆக்கி அணி, ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் நெதர்லாந்தில் உள்ள பிரிடாவில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, பெல்ஜியத்துடன் மோதியது. விறுவிறுப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வி கண்டது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் மட்டுமே 2 கோல்கள் அடித்தார்.

பெண்கள் பிரிவிலும் இந்திய அணி 2-3 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்