ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: இந்திய அணி அறிவிப்பு
|ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
21-வயதுக்குட்பட்டோருக்கான 11-வது ஜூனியர் ஆண்கள் ஆசிய கோப்பை ஆக்கி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் வரும் 26-ம் தேதி தொடங்கி நவம்பர் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி குருப் ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, சீன - தைபே, ஜப்பான், கொரியா மற்றும் தாய்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி -ல் வங்காளதேசம், சீனா, ஓமன், பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு அமீர் அலி கேப்டனாகவும், ரோகித் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணி விவரம் பின்வருமாறு:-
அமீர் அலி (கேப்டன்), பிரின்ஸ்தீப் சிங், பிக்ரம்ஜித் சிங், தலேம் பிரியோபர்தா, ஷர்தானந்த் திவாரி, யோகம்பர் ராவத், அன்மோல் எக்கா, ரோகித் (துணை கேப்டன்), அங்கித் பால், மன்மீத் சிங், ரோசன் குஜூர், முகேஷ் டோப்போ, தோக்சோம் கிங்சன் சிங், குர்ஜோத் சிங், சவுரப் ஆனந்த் குஷ்வாஹா, தில்ராஜ் சிங், அர்ஷ்தீப் சிங், ஆரைஜீத் சிங் ஹண்டல்.