< Back
ஹாக்கி
ஹாக்கி
ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி: ஜப்பானை வீழ்த்தி இந்தியா 2-வது வெற்றி
|29 Nov 2024 6:46 AM IST
நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று நடந்த ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதியது.
மஸ்கட்,
10 அணிகள் இடையிலான 10-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்கு உட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியனான இந்திய அணி நேற்று நடந்த ஆட்டத்தில் ஜப்பானுடன் மோதியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கோல் கணக்கில் ஜப்பானை தோற்கடித்து 2-வது வெற்றியை ருசித்தது. தோக்சோம் கிங்சன் சிங், ரோகித், அரைஜீத் சிங் ஆகியோர் இந்திய அணியில் கோல் போட்டனர். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் சீனதைபே அணியை நாளை எதிர்கொள்கிறது.