ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
|ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்திய இந்திய ஆக்கி அணி அடுத்ததாக ஆசிய கண்டத்தின் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாட உள்ளது.
செப்டம்பர் 8-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை நடைபெற உள்ள தொடரில், இந்தியா, தென்கொரியா, மலேசியா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் போட்டியை நடத்தும் சீனா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
இந்த போட்டிக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்மன்பிரீத் சிங் கேப்டனாகவும் விவேக் சாகர் பிரசாத் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி வருமாறு:-
கோல்கீப்பர்கள்: கிரிஷன் பகதூர் பதாக், சுரஜ் கர்கெரா,
பின்களம்: ஜர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), ஜூக்ராஜ் சிங், சஞ்சய், சுமித்.
நடுகளம்: ராஜ்குமார் பால், நீலகண்ட ஷர்மா, விவேக் சாகர் பிரசாத் (துணை கேப்டன்), மன்பிரீத் சிங், முகமது ரஹீல் மவுசீன்.
முன்களம்: அபிஷேக், சுக்ஜீத் சிங், அரைஜீத் சிங் ஹூன்டல், உத்தம் சிங், குர்ஜோத் சிங்.