< Back
ஹாக்கி
ஆக்கி போட்டி; இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்
ஹாக்கி

ஆக்கி போட்டி; இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
23 Oct 2024 8:29 AM IST

போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசமாகும்

புதுடெல்லி,

இந்தியா - ஜெர்மனி ஆக்கி அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது ஆட்டம் டெல்லியில் உள்ள மேஜர் தயான்சந்த் தேசிய ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. 2014-ம் ஆண்டுக்கு பிறகு டெல்லியில் நடக்கும் முதல் சர்வதேச ஆக்கி போட்டி இதுவாகும். போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி இலவசமாகும்.

சமபலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.மாலை 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை தூர்தர்ஷன் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்