ஹாக்கி
ஆக்கி இந்தியா லீக்: வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி அபார வெற்றி
ஹாக்கி

ஆக்கி இந்தியா லீக்: வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி அபார வெற்றி

தினத்தந்தி
|
8 Jan 2025 8:24 AM IST

நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் - ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின.

ரூர்கேலா,

6-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 14-வது லீக் ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் - ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வேதாந்தா கலிங்கா லான்சர்ஸ் அணி 6-0 என்ற கோல் கணக்கில் ஷராச்சி ரார் பெங்கால் டைகர்ஸ் அணியை பந்தாடி முதல் வெற்றியை சுவைத்தது.

இன்றைய ஆட்டங்களில் கோனாசிகா- தமிழ்நாடு டிராகன்ஸ் (மாலை 6 மணி), உ.பி. ருத்ராஸ்- ஐதராபாத் டூபான்ஸ் (இரவு 8.15 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்