கால்பந்து
உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா அணிக்கு திரும்பிய மெஸ்சி

Image Courtesy : FIFA World Cup Twitter

கால்பந்து

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்று: அர்ஜென்டினா அணிக்கு திரும்பிய மெஸ்சி

தினத்தந்தி
|
4 Oct 2024 6:59 AM IST

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

பியூனஸ் அயர்ஸ்,

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் அர்ஜென்டினா அணி வருகிற 10-ந் தேதி வெனிசுலாவையும், 15-ந் தேதி பொலிவியாவையும் சந்திக்கிறது.

இந்த போட்டிகளுக்கான அர்ஜென்டினா கால்பந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் கணுக்காலில் அடைந்த காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களை தவறவிட்ட அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி அணிக்கு திரும்பி இருக்கிறார்.

இந்த பிரிவில் அர்ஜென்டினா அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 2 தோல்வியுடன் 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்