< Back
கால்பந்து
மகளிர் கால்பந்து: மாலத்தீவை வீழ்த்திய இந்தியா

Image Courtesy: @IndianFootball

கால்பந்து

மகளிர் கால்பந்து: மாலத்தீவை வீழ்த்திய இந்தியா

தினத்தந்தி
|
31 Dec 2024 4:10 PM IST

14-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

பெங்களூரு,

சர்வதேச நட்பு ரீதியிலான மகளிர் கால்பந்தாட்டத்தில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - மாலத்தீவு அணிகள் மோதின. இந்த போட்டியில் தொடக்கம் முதலே இந்திய மகளிர் அணி ஆதிக்கம் செலுத்தியது. இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் இந்திய அணி 7 கோல்களை அடித்து அசத்தியது. மாலத்தீவு கோல் அடிக்க முடியாமல் திணறியது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் 7-0 என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்திலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. 2வது பாதி ஆட்டத்திலும் இந்தியா 7 கோல்களை அடித்து அசத்தியது. மாலத்தீவு பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் இந்த ஆட்டத்தில் 14-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் லிண்டா கோம் செர்டோ 4 கோல், பியாரி ஜஜா 3 கோல் அடித்து அசத்தினர். அவர்கள் தவிர, நேஹா, கஜோல் டிசவுஸா ஆகியோர் தலா 2 கோல், சங்கீதா பாஸ்போர், ரஞ்ஜனா சானு, ரிம்பா ஹால்டர் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய மகளிர் கால்பந்து அணியின் புதிய பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜாவ்கிம் அலெக்ஸாண்டர்சன் தனது பணியை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறார். இரு அணிகளும் மோதும் 2-ஆவது ஆட்டம், ஜனவரி 2-ம் தேதி இதே பெங்களூரு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் செய்திகள்