1000 கோல்கள் அடிப்பேனா..? மனம் திறந்த ரொனால்டோ
|ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் தனது 900-வது கோலை அடித்தார்.
லிஸ்பன்,
கால்பந்து உலகின் நட்சத்திர வீரரான போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் தனது 900-வது கோலை அடித்தார். அவர் கிளப் போட்டிகளில் 769 கோலும், சர்வதேச போட்டிகளில் 131 கோலும் அடித்திருக்கிறார்.
இதன் மூலம் சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் 900 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், தான் 1000 கோல்கள் அடிப்பது குறித்து அவர் பேசியுள்ளார். அதில், "இனிமேல் நீண்ட கால சாதனைகள் குறித்து சிந்திக்க முடியாது. நான் 1,000 இலக்குகளை அடைய விரும்புகிறேன் என்று கூறினேன். ஆனால் இப்போது எல்லாம் எளிமையானதாகவே தெரிகிறது. கடந்த மாதம்தான், நான் 900 கோல்கள் அடித்தேன். 1000-வது கோல் அடித்தால் சிறப்பாகத்தான் இருக்கும். ஆனால் அது நடக்கவில்லை என்றாலும் கவலையில்லை. ஏனெனில் தற்போதே நான்தான் அதிக கோல் அடித்தவர்களில் முதலிடத்தில் உள்ளேன்" என்று கூறினார்.