< Back
கால்பந்து
கால்பந்து
தெற்காசிய பெண்கள் கால்பந்து; அரையிறுதியில் தோல்வி கண்ட இந்தியா
|28 Oct 2024 9:49 AM IST
7-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடந்து வருகிறது.
காத்மாண்டு,
7-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான இந்திய அணி, போட்டியை நடத்தும் நேபாளத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது.
பின்னர் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்-அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் நேபாளம் 4-2 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரையிறுதியில் வங்காளதேசம் 7-1 என்ற கோல் கணக்கில் பூட்டானை பந்தாடியது. நாளை மறுதினம் நடக்கும் இறுதிப்போட்டியில் வங்காளதேசம்- நேபாளம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.