< Back
கால்பந்து
கால்பந்து
தெற்காசிய பெண்கள் கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி
|18 Oct 2024 5:03 AM IST
இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
காத்மாண்டு,
7-வது தெற்காசிய பெண்கள் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நேபாள தலைநகர் காத்மாண்டுவில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 7 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.
'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள 5 முறை சாம்பியனான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 5-2 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணியில் கிரேஸ் 2 கோலும், மனிஷா, ஜோதி, பாலா தேவி தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் வருகிற 23-ந் தேதி நடப்பு சாம்பியன் வங்காளதேசத்தை எதிர்கொள்கிறது.