< Back
கால்பந்து
குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரொனால்டோ

Image : AFP

கால்பந்து

குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய ரொனால்டோ

தினத்தந்தி
|
25 Dec 2024 11:35 AM IST

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

லாப்லாந்து,

உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பின்லாந்து நாட்டில் உள்ள லாப்லாந்தில் குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்.

'சாண்டாகிளாஸ்' உடனான சந்திப்பு உள்ளிட்ட தனது பயணத்தை அவர் யூடியூப் சேனலில் பகிர்ந்துள்ளார். மேலும், குளிர்ந்த குளத்தில் மூழ்கும் வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இது மிகவும் சிறப்பான நாள், மிகவும் வித்தியாசமானது என்று ரொனால்டோ தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்