< Back
கால்பந்து
கால்பந்து
நேஷன்ஸ் லீக் கால்பந்து: ரொனால்டோ அசத்தல்..காலிறுதிக்கு தகுதி பெற்ற போர்ச்சுகல்
|16 Nov 2024 3:55 PM IST
போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ 2 கோல் அடித்தார்.
போர்டோ,
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் - போலந்து அணிகள் மோதின. இந்த ஆட்டம் போர்ச்சுகலில் உள்ள போர்டோ நகரில் நடைபெற்றது
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் போர்ச்சுகல் அணி சிறப்பாக விளையாடியது இதனால் ஆட்ட நேர முடிவில் 5-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி வெற்றி பெற்று அணி காலிறுதிக்கு முன்னேறியது.
போர்ச்சுகல் அணியில் ரொனால்டோ 2 கோல் ,ரபேல் லயோ ,புருனோ பெர்னாண்டஸ், பெட்ரோ நேட்டோ ஆகியோர் தலா கோல் அடித்தனர் . போலந்து அணியில் டொமினிக் ஒரு கோல் அடித்தார்.