< Back
கால்பந்து
நேஷன்ஸ் லீக் கால்பந்து: குரோஷியா - போர்ச்சுகல் ஆட்டம்  டிரா
கால்பந்து

நேஷன்ஸ் லீக் கால்பந்து: குரோஷியா - போர்ச்சுகல் ஆட்டம் 'டிரா'

தினத்தந்தி
|
19 Nov 2024 3:44 PM IST

தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின.

ஜாக்ரெப்,

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடரில், நேற்று நடைபெற்ற ஒரு லீக் ஆட்டத்தில் குரோஷியா-போர்ச்சுகல் அணிகள் மோதின. இந்த ஆட்டம் குரோஷியாவில் உள்ள ஸ்ப்லிட் நகரில் நடைபெற்றது.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்தின. இதனால் இந்த ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது. போர்ச்சுகல் அணியில் ஜோவோ பெலிக்ஸ் கோல் அடித்தார் .குரோஷியா அணியில் ஜோஸ்கோ கவர்டியல் கோல் அடித்தார்.

ஏற்கனவே போர்ச்சுகல் , குரோஷியா காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் செய்திகள்