ரியல் மாட்ரிட் கிளப் அணியுடன் இணைந்தார் எம்பாப்பே
|பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் கிளப் அணியுடன் இணைந்தார்.
பாரீஸ்,
பிரான்ஸ் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் கிலியான் எம்பாப்பே. கிளப் போட்டிகளில் கடந்த 2017ம் ஆண்டு முதல் பாரீஸ் செயின்ட்-ஜெர்மைன் (பி.எஸ்.ஜி) அணிக்காக விளையாடி வந்த எம்பாப்வே கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த லீக்-1 சீசனோடு பி.எஸ்.ஜி. அணியில் இருந்து வெளியேற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
இதையடுத்து அவர் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைய அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் கிலியான் எம்பாப்பே ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப் அணியில் இணைந்ததாக இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கிளப் தலைவர் ப்ளோரெண்டினோ பெரெஸ் முன்னிலையில் அவர் அணியில் இணைந்தார். ரியல் மாட்ரிட் அணியில் பிரபர் வீரரான லூகா மோட்ரிக்கிற்கு 10வது நம்பர் ஜெர்சி எண்ணாக இருப்பதால், எப்பாப்பேவுக்கு 9ம் நம்பர் கொண்ட ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.